குளித்தலை சட்டமன்றத் தொகுதி நங்கவரத்தில் புதிய காவல் நிலையம்

 

குளித்தலை, ஏப். 22: கரூர் மாவட்டத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் குளித்தலை, லாலாபேட்டை, தோகைமலை, மூன்று காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் குளித்தலை காவல் நிலையத்திற்கு குளித்தலை ஒன்றியம் கிராம ஊராட்சிகள், மருதூர் நங்கவரம் பேரூராட்சி, மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் தோகைமலை வட்டத்தில் ஒரு சில கிராம பஞ்சாயத்துக்கள் குளித்தலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியாக இருந்து வந்தது. இதனால் குற்ற சம்பவங்கள் ஏற்பட்டால் 25 லிருந்து 30 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று சம்பவ இடத்திற்கு காவல் அதிகாரிகள் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் தாமதமாக எடுக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்து வந்தது.

இதை கருத்தில் கொண்டு அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் சட்டமன்ற தேர்தலின் போது எம்.எல்.ஏ மாணிக்கத்திடம், நங்கவரம் தலைமை இடமாக கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் கிராம பகுதியாக இருக்கும் எங்களுக்கு பாதுகாப்புக்கும் சரி சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கும் சரி அனைத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை வைத்திருந்தனர். கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ மாணிக்கம் சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரிந்துரைப்படி குளித்தலை சட்டமன்ற தொகுதி நங்கவத்தில் புதிய காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

கோரிக்கையை ஏற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் நங்கவரத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதனால் நங்கவரம் பேரூராட்சி , பொய்யாமணி, இனுங்கூர், நச்சலூர், புத்தூர், தளிஞ்சி , அர்ச்சம்பட்டி, , முதலைப்பட்டி, சூரியனூர், ஆலத்தூர், நெய்தலூர், உள்ளிட்ட கிராம பகுதி பொதுமக்கள் விவசாயிகள் குளித்தலை தொகுதி நங்கவரத்திற்கு புதிய காவல் நிலையம் அமைக்க படும் உத்தரவிட்டதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை