குளந்தூர் நாயக்கர்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் குளத்தூர் நாயக்கர்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா வழிகாட்டல்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி நடந்தது. 6 முதல் 8ம் வகுப்புவரை நடைபெற்ற போட்டியினை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிராணி தொடங்கி வைத்தர். மேலும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியினை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் புண்ணியமூர்த்தி தொடங்கி வைத்து பேசினார். தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரன் வரவேற்றார். மேலாண்மை குழு தலைவி மல்லிகா முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் கோ.கோ, கபாடி, சாக்கு ஓட்டம், 100, 200, 300, 400, 500 மீட்டர் ஓட்டப்பந்தயம், கிரிக்கெட், கேரம், சதுரங்கம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டினால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நடுவர்களாக அரசு மேல்நிலைப்பள்ளி ரெகுநாதபுரம் உடற்கல்வி ஆசிரியர் மாலா, பள்ளி ஆசிரியர்கள் வெள்ளையம்மாள், சாந்தகுமாரி, தர்மா பாய், ராதா, இலக்கியா, குணசேகரன், ஒவிய ஆசிரியர் பூபதி, ஆகியோர் செயல்பட்டனர். மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுதந்திர தினத்தில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்தனர்….

Related posts

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்