குளத்தூரில் கபடி போட்டி இ.வேலாயுதபுரம் அணி முதலிடம்

 

குளத்தூர், மே 31: குளத்தூரில் நடந்த கபடி போட்டியில் இ.வேலாயுதபுரம் அணி முதலிடம் பிடித்தது. குளத்தூர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் மற்றும் அபிமன்யூ கபடி குழு சார்பில் ஆண்களுக்கான சூரியஒளி கபடி போட்டிகள் நடத்தப்பட்டது. 2 நாட்கள் நடைபெற்ற மாவட்ட அளவிலான சூரியஒளி கபடிப் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நாக் அவுட் சுற்று போட்டிகளையடுத்து பரிசுகளுக்கான போட்டிகள் நடந்தது.

இதில் முதலிடம் பிடித்த இ.வேலாயுதபுரம் தமிழன்னை அணிக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. 2வது இடம்பிடித்த குளத்தூர் அபிமன்யூ அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, 3வது இடம் பிடித்த குளத்தூர் காலனி முத்துராஜா அணிக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் கோப்பை, 4வது இடம் பிடித்த அபிமன்யூ பி அணிக்கு ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. காலிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த4 அணிகளுக்கும் தலா ரூ.3 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டி அமைப்பாளர் சின்னராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை அபிமன்யூ கபடி குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்