குளச்சலில் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்

குளச்சல், டிச.31 : நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும், இந்திய தண்டனை சட்ட திருத்தங்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க கூடாது என்று கேட்டும், குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (ஆர்.ஐ) சார்பில் குளச்சல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் மேரி ஸ்டெல்லா, தனபால், அமலா, பரமேஸ்வரன், லாயம் சுசீலா, லைசெட், வசந்தா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை