குலசேகரன்பட்டினத்தில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது ஆட்டோ, டூவிலர்கள் பறிமுதல்

உடன்குடி, நவ. 29: குலசேகரன்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்திய மூவரை கைது செய்த போலீசார் ஆட்டோ, 2 டூவிலர்களை பறிமுதல் செய்தனர். குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணி, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த 2 டூவிலர்கள், ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் டூவீலரில் வந்தவர்கள், திருச்செந்தூர் அமலிநகரைச் சேர்ந்த கணபதி (44), திருச்செந்தூர் முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முனியாண்டி (36) மற்றும் நாசரேத் மூக்குபீறியைச் சேர்ந்த மிக்கேல்ராஜ் (52) என்பதும் தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து டூவிலர்கள், ஆட்டோ, புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புகையிலை கடத்தலில் தொடர்புடைய நயினார்புரத்தைச் சேர்ந்த செல்டன்பொன்ராஜ், ராணிமகாராஜபுரத்தைச் சேர்ந்த பால
கணேஷ் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

Related posts

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி அண்ணா நகர் கிளையில் கூட்டுறவு துறை பணியாளர் நாள்

திருவெறும்பூர் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது