குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள் படகில் தப்பி ஓட்டம்

ராமநாதபுரம்: குற்ற வழக்குகளில் தொடர்புடைய இரு இலங்கை தமிழர்கள் படகு மூலம் இலங்கைக்கு தப்பி சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இலங்கை, யாழ்ப்பாணம் வேலனை பகுதியை சேர்ந்த ஜெயநேசன் (32) கடந்த 2008ல் இலங்கையில் இருந்து வந்து, மண்டபம் அயலக தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்தார். இவர் 2013ல் விசாகப்பட்டினம் ஏர்போர்ட்டில் இருந்து விமானம் மூலம் இலங்கை தப்பி செல்ல முயன்றபோது அந்நியர் ஊடுருவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த இவர் மண்டபம் முகாமில் தங்கி இருந்தார். கடந்தாண்டு வெளிநாடு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தவருக்கு, வழக்கு நிலுவையில் இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல் தாஸ் (எ) சுலக்சன் மீது மண்டபம் போலீசில், கடந்த மாதம் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவரும்  படகு மூலம் நேற்று முன்தினம் இரவு இலங்கைக்கு தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்….

Related posts

விஷ சாராய வழக்கில் மேலும் 2 பேர் கைது: ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி

ஆர்டிஓவை கொல்ல முயற்சி அதிமுக நிர்வாகி மீது குண்டாஸ்

ரவுடிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வேலூர் மத்திய சிறை மனநல ஆலோசகர் கைது