குற்றால அருவிகள் வறண்ட நிலையில் குறைவின்றி கொட்டுது அகஸ்தியர் அருவி

விகேபுரம்: குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்துள்ள நிலையில், அகஸ்தியர் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் உள்ள அருவிகளில் மழை காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். குற்றாலத்தில் உள்ள அருவிகளில் சீசன் காலங்களில் தண்ணீர் கொட்டும். ஆனால் பாபநாசம் மலையில் உள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருந்து கொண்டே இருக்கும். தற்போது வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் நன்றாக விழுகிறது. நேற்று விடுமுறை நாள் மற்றும் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வாகனங்களில் அதிகளவில் வந்து குவிந்தனர். அருவியில் குறைவின்றி கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். தற்போது குற்றால அருவிகளில் தண்ணீர் விழாததால் சுற்றுலாப் பயணிகள் அகஸ்தியர் அருவிக்கு படையெடுத்து வந்தனர். இதனால் பாபநாசம் வன சோதனைச்சாவடி முதல் அரசு போக்குவரத்து கழக பணிமனை வரை சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனைக்காக அணிவகுத்து நின்றன. அருவிக்குச் செல்லும் அனைத்து வாகனங்களையும் பாபநாசம் சோதனை சாவடியில் வனத்துறையினர் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதி அளித்தனர். சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மதுபானங்களை கொண்டு வந்தால் பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே அழித்தனர்….

Related posts

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

3 புதிய சட்டங்கள் குறித்து நீதி மற்றும் காவல் துறையினருக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்