குற்றாலம் மெயினருவியில் ஓரமாக நின்று குளிக்க அனுமதி

தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் களை கட்டி காணப்படுகிறது. குறிப்பாக ஜூலை மாதத்தின் இறுதியில் இருந்து தற்போது வரை தினமும் சாரல் பெய்து வருவதுடன் அவ்வப்போது மேற்குத்தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையாகவும் பெய்து வருகிறது. இந்நிலையில் இரவு விடிய விடிய பெய்த மழை காரணமாக நேற்று அதிகாலை முதல் காலை வரை மெயினருவியில் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் காலையில் அருவியின் மையப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாதவாறு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது….

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி