குறைந்த காலத்தில் கூடுதல் லாபம் கிடைப்பதால் சூரியகாந்தி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

*4 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்கரூர் : கரூர் மாவட்டத்தில் குறைந்த காலத்தில் கூடுதல் லாபம் கிடைப்பதால், விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் 4 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்தியா முழுவதும் பணப் பயிராக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை குறிப்பாக நிலக்கடலை ரப்பர், பருத்தி, புகையிலை , பருத்தி, நிலக்கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எள் உள்ளடக்கிய பயிர்கள் முக்கியத்துவம் பெற்று வந்தன.ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவிலும் பாமாயில் மற்றும் சூரியகாந்தி பயன்பாடு அதிகமாக இருப்பதால் விவசாயிகள் சூரியகாந்தி பயிர் செய்வதில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர்.குறிப்பாக, சூரியகாந்தி ஒரு வெப்ப மண்டல பயிர் என்பதால் இது சுமார் 90 முதல் முதல் 95 நாட்களுக்குள் முதிர்ச்சி அடைந்து பலன் தருகிறது. இதனால் மாற்றுப்பயிராக சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சூரியகாந்தி பயிருக்கு கத்தரி, தக்காளி, வெண்டை ஆகிய காய்கறி பயிர்களுக்கு உற்பத்தி செய்யும் போது, பயிர்களுக்கு ஆகும் அளவிற்கு இடுபொருள் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.மேலும், சூரியகாந்தி பயிர்களை கொடிய நோய் கிருமிகள் தாக்குவதில்லை. கரூர் மாவட்டத்தில் கடவூர் ஒன்றியம் தோகைமலை ஒன்றியம் கிருஷ்ணராயபுரம், கரூர் ஒன்றிய மன்மங்கலம், கோயம்பள்ளி, உப்பிடமங்கலம் புலியூர் மற்றும் பரமத்தி ஆகிய பகுதிகளில் அதிகமாக சூரியகாந்தி பயிர் செய்யப்படுகிறது,குறிப்பாக, கடவூர் ஒன்றியத்திலும் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலும் சூரியகாந்தி அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நிலக்கடலைக்கு அடுத்தபடியாக சுமார் 4000 ஏக்கர் நிலப்பரப்பு வரை சூரியகாந்தி பயிர் செய்யப்படுவதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சூரியகாந்தி பயிரிலிருந்து முதிர்ச்சியடைந்த விதைகளை தேர்வு செய்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் தனியார் கமிஷன் தானிய மண்டிகளில் விவசாயிகளால் விற்பனை செய்யப்படுகிறது. நல்ல தரமான முதிர்ச்சியடைந்த திடகாத்திரமான சூரியகாந்தி விதை கிலோ ரூபாய் 70 முதல் 90 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்தால் 15 முதல் 20 மூட்டைகள் வரை மாக்ஸில் கிடைக்கும் அளவிற்கு சூரியகாந்தி விதை உற்பத்தி செய்ய முடியும்.தற்போது உள்ள நிலையை கருத்தில் கொண்டு கரூர் மாவட்டத்தில் சூரியகாந்தி விதையின் மூலம் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனை உள்நாட்டு தேவைக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையை கரூர் மாவட்ட சூரியகாந்தி பயிர் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.வரும் காலத்தில் இத்தொழிலானது தற்போது அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் பயிர் உற்பத்தி எந்த அளவிற்கு சிறந்து விளங்குகிறதோ, அதே போல் கரூர் மாவட்டத்தில் சூரியகாந்தி பயிர் உற்பத்தியும் அதிகப்படுத்தி விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய ஒரு விவசாய பயிராக இருக்கும். மேலும் விவசாயிகளின் வருவாயை பெருக்குவதற்கு ஏதுவாக சூரியகாந்தி பயிர் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை