குறைந்து வரும் தொற்று பாதிப்பு: உலக அளவில் 21.54 கோடி பேருக்கு கொரோனா..! 44.87 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு ..

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44.87 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,487,320 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 215,429,451 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 192,615,653 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 112,700 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 220 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 54 லட்சத்து 29 ஆயிரத்து 451ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 83 லட்சத்து 26 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19 கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 653 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 44 லட்சத்து 87 ஆயிரத்து 320 பேர் உயிரிழந்துள்ளனர்….

Related posts

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி காமெனி ஆவேச பேச்சு

ஒரே நேரத்தில் காசா, மேற்குகரை, லெபனான் மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல்; ஈரான் எண்ணெய் கிணறு, அணு உலைக்கு குறி: மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் போர் பதற்றம்