குறைதீர் முகாமில் 607 மனுக்கள்

 

மதுரை, ஆக. 8: மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமிற்கு கலெக்டர் சங்கீதா தலைமை வகித்து மனுக்களை பெற்றார். இந்த முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல், ஆக்கிரமிப்பு அகற்றம், குடும்ப அட்டை வழங்கல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 607 மனுக்களை வழங்கினர்.

இவற்றை ஆய்வு செய்து தகுதியான மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தையொட்டி, மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும், அரசு தரப்பில் 5 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

Related posts

கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

கருத்தப்பாலம் பகுதியில் சீரமைப்பு பணி

தூத்துக்குடியில் ஜூலை6ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு