குறைதீர் நாள் கூட்டத்தில் 569 மனுக்கள் குவிந்தன

தர்மபுரி, அக்.10: தர்மபுரியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 569 மனுக்களை அளித்தனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், புதிய குடும்ப அட்டைகள், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 569 மனுக்கள் அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, உரிய தீர்வு காணும்படி உத்தரவிட்டார். கூட்டத்தில், நல்லம்பள்ளி ஒன்றியம், பாலஜங்கமனஅள்ளியைச் சேர்ந்த பழனியம்மாளுக்கு, இலவச வீட்டுனை பட்டாவை கலெக்டர் சாந்தி வழங்கினார். மேலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், அரூர் வட்டம், கொங்கரப்பட்டியைச் சேர்ந்த சுகுணா என்பவருக்கு ₹2.10 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் பணிக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் சையது ஹமீத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர் இக்பால், உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) தமிழரசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜசேகர், பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு