குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மாற்றம்

சென்னை: குறிஞ்சிப்பாடி தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டு முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் சமீபத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளராக ராமபழனிசாமி அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்தார். இந்நிலையில் ராமபழனிசாமியை நீக்கிவிட்டு முன்னாள் அமைச்சர் ராமஜெயத்தை அதிமுக தலைமை புதிய வேட்பாளராக அறிவித்துள்ளது.இதுகுறித்து, அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், கடலூர் மத்திய மாவட்டம் (156) குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அமைச்சர், கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் செல்வி ராமஜெயம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

சொல்லிட்டாங்க…

யார் ஆட்சியில் அரசு திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டினார்கள் என்பது மக்களுக்கு தெரியும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி; அரியானாவில் மீண்டும் ெதாங்கு சட்டசபை?: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்