காமன்வெல்த் ஆண்கள் பளுதூக்குதல் 61 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் குருராஜா பூஜாரி ஸ்நேட்ச் முறையில் 118 கிலோ மற்றும் கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 151 கிலோ என மொத்தம் 269 கிலோ எடை தூக்கி 3வது இடம் பிடித்தார். குருராஜ் வென்ற வெண்கலம் இந்தியாவுக்கு நேற்று கிடைத்த 2வது பதக்கமாகும். இந்த பிரிவில் மலேசியாவின் அஸ்னில் பிடின் முகமது புதிய காமன்வெல்த் சாதனையுடன் (285 கிலோ) தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். பப்புவா நியூகினியா வீரர் மோரியா பாரு (273 கி.) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்….