கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் பஸ் நிழற்குடையை ஆக்கிரமித்துள்ள கடை, ஜல்லி, எம்சாண்ட் குவியல்கள்: பயணிகள் அவதி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கோட்டக்கரை 4வது வார்டுக்கு உட்பட்ட ஜி.என்.டி சாலையில் அரசு பேருந்து நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை அருகே அரசு மருத்துவமனை, வட்டார வளர்ச்சி அலுவலகம், கால்நடை மருத்துவம், ஆதிதிராவிடர் விடுதி, வருவாய் துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.இந்த அலுவலகங்களுக்கு ரெட்டம்பேடு, கோட்டக்கரை, பெத்திக்குப்பம், ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், பாதிரிவேடு, நெல்வாய், அயநல்லூர், பண்பாக்கம், ஏனாதி மேல்பாக்கம், சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம், எளாவூர், தோக்கமூர், பல்லவாடா, செந்தில்பாக்கம், மங்காவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் மருத்துவம் பார்ப்பதற்கு, மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைக்கு சம்பந்தமாக, அரசு அளிக்கும் தொகுப்பு வீடு சம்பந்தமாக மற்றும் கால்நடை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தினமும் 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அப்போது ஒவ்வொருவரும் பேருந்து நிலையம் வழியாக பேருந்து நிலையத்திலிருந்து தான் ஆட்டோ, அரசு பேருந்து பயணிக்கின்றனர். இந்நிலையில், கோட்டக்கரை 4வது வார்டு, ஜி.என்.டி.சாலை ஒரமாக உள்ள பஸ் நிழற்குடை முன்பு தனியாருக்கு சொந்தமான எம்சாண்ட், ஜல்லி மற்றும் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பேருந்து நிழற்குடையில் நிற்க முடியாமல் பயணிகள் வெயிலில் நின்று பயணிக்கின்றனர். மேலும், அவ்வப்போது மழை திடீர் திடீரென பொழிந்து வருகிறது. இதனால் மழையிலும் பொதுமக்கள் நனைந்தபடியே பயணிக்கின்றனர். இது சம்பந்தமாக சில நாட்களாக பொதுமக்கள் நிழற்குடை அருகே உள்ள பொருட்களை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை ஜல்லி, எம்சாண்டுகளை அகற்றப்படாமல் இருக்கிறது. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்