கும்பகோணம், தஞ்சாவூரிலிருந்து சரக்கு ரயிலில் 2 ஆயிரம் டன் நெல், 1250 டன் அரிசி திருவள்ளூர், கோயம்புத்தூருக்கு அனுப்பி வைப்பு

 

தஞ்சாவூர், ஆக. 25: கும்பகோணம், தஞ்சாவூரிலிருந்து சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல், 1250 டன் அரிசி திருவள்ளூர், கோயம்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல், 1250 டன் அரிசி கும்பகோணம், தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் கும்பகோணத்தில் இருந்து திருவள்ளூருக்கு 2000 டன் நெல் 42 வேகன்களிலும், 21 வேகன்களில் அரவைக்காக, 1250 டன் அரிசி பொது விநியோக திட்டத்திற்காக தஞ்சாவூரில் இருந்து கோயம்புத்தூருக்கு சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை