கும்பகோணம் அருகே மழைநீர் சூழ்ந்ததால் பயிர்கள் பாதிப்பு

 

கும்பகோணம்,ஜன.9: கும்பகோணம் அருகே மழைநீர் சூழ்ந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே வில்லியவரம்பல், தண்டாந்தோட்டம், செம்பியவரம்பல் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 150 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளானது.

இதில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 வரை செலவு செய்துள்ள நிலையில் தற்போது என்ன செய்வது என தெரியாமல் இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி