கும்பகோணம் அருகே உள் வாங்கிய பாலம் பணிகள் மீண்டும் துவக்கம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே வடக்குமாங்குடியில் கான்கிரீட் போட்டு பணிகள் முடிவுற்ற நிலையில் பாலம் உள்வாங்கியது. இதையடுத்து பாலம் கட்டும் பணி மீண்டும் துவங்கி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, வடக்குமாங்குடி வஞ்சுவழி பள்ளிவாசல் சாலையில் வடிகால் வாய்க்கால் ஒன்று அமைந்துள்ளது. எம்எல்ஏ நிதியிலிருந்து ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் இந்த சிறிய பாலம் கான்கிரீட் போடப்பட்டு பணிகள் முடிந்த இரண்டு நாட்களிலேயே உள் வாங்கியது. இதனால் அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்த உள்வாங்கிய பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டும் பணியை மேற்கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை