கும்பகோணத்தில் முழு உடல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம்

 

கும்பகோணம், செப். 25: கும்பகோணம் பாலக்கரை பகுதி சகாஜி தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் உரிமை கழகம் மற்றும் கோபுரம் பவுண்டேஷன் இணைந்து எல் கேர் மைக்ரோ லேப் உதவியுடன் நடத்திய முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இம்முகாமில் ரூ.2,700 மதிப்புள்ள முழு உடல் பரிசோதனையான ரத்த வகை டெஸ்ட் வெறும் ரூ.590க்கு 41 வகையான இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை கோபுரம் பவுண்டேஷன் வடக்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், செயலாளர் உதயகுமார், பொருளாளர் ஸ்டாலின் மற்றும் துணைத்தலைவர் வெங்கடேசன் செய்திருந்தனர். இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு