கும்பகோணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

 

கும்பகோணம், ஜூன் 22: கும்பகோணத்தில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மற்றும் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கும்பகோணம் அருகே கொட்டையூர் வள்ளலார் பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், மகளிர் லியோ சங்கம், சிட்டி யூனியன் வங்கி மற்றும் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இம்முகாமை லயன்ஸ் சங்க தலைவர் கண்ணன் துவக்கி வைத்தார். இம்முகாமில் பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்டோருக்கு கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டன. அவர்களை அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பள்ளி தலைமையாசிரியர் சுந்தரமூர்த்தி மற்றும் லயன்ஸ் சங்கம் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு