குமுளூர் கீழ பழனிமலையில் பங்குனி உத்தர விழா தேரோட்டம்

லால்குடி, ஏப்.6: லால்குடி அருகே குமுளூர் கீழ பழனி மலையில் பங்குனி உத்திர தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த குமுளூர் கீழ பழனி மலையில் எழுந்தருளியிருக்கும் விநாயகர்,  பால தண்டாயுதபாணி சுப்பிரமணிய சுவாமி,  இடும்பன்,  காமாட்சி அம்மன்,உடனுறை  கடம்பனவேஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கடந்த 30ம் தேதி கீழபழனிமலையில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 1 ம் தேதி தேர் முகூர்த்த கால் நடப்பட்டது. 4 ம் தேதி குதிரை வாகனம் திருவீதி, 5ம் தேதி பால்குடம், காவடி எடுத்து சென்றனர். மாலை 5 மணிக்கு பங்குனி தேரோட்டம் நடந்தது. குமுளூர் கிராமத்தைச் சுற்றியுள்ள 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை குமுளூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை