குமுளியில் குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம்; சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பு

கூடலூர், ஏப்.5: தமிழக எல்லை குமுளியில் குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டத்டதை தொடர்ந்து, அதை கண்காணிக்க வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தினர். தமிழக எல்லை குமுளி ஓட்டகத்தலமேடு மாண்முக் பகுதியில் வசிப்பவர் அனூப். நேற்று காலை அனூப்பின் மனைவி வீட்டு கிணற்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கரடி வீட்டின் அருகே வந்தது. கரடியை பார்த்ததும் அனூப்பின் மனைவி அலறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினர். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் பலத்த சத்தம் போட்டதும் கரடி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் ஓடியது.

சத்தம் கேட்டு அங்கு வந்தaவர்களும் கரடி வனப்பகுதிக்குள் செல்வதை பார்த்தனர். உடனடியாக அவர்கள் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து செல்லார்கோவில் கோட்ட வன அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வனக்காவலர் குழுவினர், அனில்குமார், மஞ்சேஷ், ஷைஜூமோன், கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அந்தப் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ‘இதையடுத்து கரடியின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினர். மேலும் இப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், இரவில் வெளியே பயணம் செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து