குமரி மீனவர்கள் 10 பேர் மகாராஷ்டிராவில் சிறைபிடிப்பு

நித்திரவிளை: குமரி மாவட்டம் சின்னத்துறையை சார்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிதொழிலுக்கு சென்றனர். அப்போது படகின் ஸ்டீரிங் உடைந்து போயுள்ளது. இதனால் மீனவர்களால் சரியாக படகை இயக்க முடியவில்லை. அதன் பிறகு இந்திய கடற்படை நண்பர்கள் அவர்களுக்கு உதவினர். தொடர்ந்து உடைந்த ஸ்டீரிங்கை சரிபார்க்க நேற்று மகாராஷ்டிரா  மாநிலத்தில் உள்ள ரெத்தினகிரி பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு உடைந்த பாகத்தை சரி செய்துவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது அங்குள்ள மீன்துறை அதிகாரிகள் மீனவர்களின் படகை சிறைபிடித்துள்ளனர். தமிழக அரசு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்