குமரி மாவட்டத்தில் அழிவை நோக்கிச் செல்லும் உப்பளத்தொழில்: சுமார் 800 ஏக்கர் உப்பளங்கள் 200 ஏக்கர்களாக சுருங்கின..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 800ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து நடைபெற்றுவந்த உப்பள பணிகள் ஆள்பற்றாக்குறை மற்றும் மழை போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்படைந்து 200 ஏக்கராக சுருங்கி உள்ளதாக, உப்பளத்தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மீட்க தமிழக அரசு உதவ கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் உத்தலம், தென் தாமரைக்குளம், ஸ்வாமிதோப்பு, கோவளம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 800ஏக்கரில் நடந்துவந்த உப்பள தொழிலில் 1000 கனக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இங்கு உற்பத்திசெய்யப்படும் உப்பு இந்தியா மற்றுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில் மழை பாதிப்புகளால் உப்பளங்களில் தண்ணீர் தேங்குவது, குறைந்த கூலி, நிரந்தரவருமானமின்மை உள்ளிட்ட காரணங்களால்  உப்பள தொழிலை விட்டு தொழிலாளர்கள் வேறு பணிக்கு செல்வது தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்றுவந்த உப்பள தொழில் தற்போது 200 ஏக்கராக சுருங்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர் உப்பள உற்பத்தியாளர்கள். உப்பளங்களின் பரப்பளவு குறைந்ததால் கடந்த காலங்களில் 500டன் உற்பத்தி என்ற நிலைக்கு மாறாக தற்போது வெறும் 80டன் உப்பு உற்பத்தி குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் எதிரொலியாக தேவைக்கும் குறைவாக உப்பு உற்பத்தியாவதால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 660 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்ட 1டன் உப்பு தற்போது 3200 ரூபாய்க்கு வரை விற்கப்படுவதாக கூறுகின்றனர். 75கிலோ உள்ள ஒரு டன் உப்பு அல்ல தொழிலாளர்களுக்கு 40 ரூபாய் வழங்க படும் நிலையில் உப்பு உற்பத்தி குறைந்ததால் நாள் ஒன்றிற்கு 10க்கும் குறைவான மூட்டை அளவிலேயே உப்பு அல்ல படுவதாக கூறும் தொழிலாளர்கள் இதனால் சொற்ப கூலியே கிடைப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.அழியும் தருவாயில் உள்ள உப்பளங்களை காக்க உப்புஉற்பத்திக்கு இலவச மின்சாரத்தை அரசு வழங்க வேண்டும் என்றும், குமரி மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள அரசு உப்பள அலுவலகத்தை மீண்டும் திறக்கவேண்டும் என்றும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் மழை காலங்களில் உப்பளங்களில் பழையாற்றுவெள்ளம் புகுந்து விடாத படி தரைகளை பலப்படுத்துவதோடு,உப்பளங்களை  சுற்றியுள்ள முள்காடுகளை அகற்றி சீர் அமைக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  …

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்