குமரியில் மீண்டும் சாரல் மழை

நாகர்கோவில், ஜூன் 6: குமரி மாவட்டத்தில் கனமழை ஓய்ந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. பாலமோர், பெருஞ்சாணி, புத்தன் அணை, சுருளோடு உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை வரை மழை பெய்திருந்தது. நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் மழை பொழிவதுமாக இருந்தது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 9.4 மிமீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.17 அடியாகும். அணைக்கு 434 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 535 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்