குப்பை கழிவுகளில் இருந்து வடமதுரையில் கிடைக்கும் இயற்கை உரம்-ஒரு டன் ரூ.750க்கு வாங்கலாம்

வடமதுரை : வடமதுரை ஒன்றியம் அய்யலூர் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா திட்டத்தில் அசத்தி வருகின்றனர்.மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கையான மண்புழு உரம். அதன் தரத்தை நிரூபிக்க வளமான காய்கறி தோட்டம். பிளாஸ்டிக் கழிவுகளை தார்ச்சாலைக்கான மூலப்பொருட்களாக மாற்றும் திட்டம் என அனைத்து திடக்கழிவுகளை பயனுள்ளதாக மாற்றி அமைப்பதே வள மீட்பு பூங்கா ஆகும்.ஒரு கிலோ ஐந்து ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மண்புழு உரம். இதனால் அய்யலூர் பகுதிகளில் விவசாயிகள் வேதி உரங்களை தவிர்த்து இயற்கை உரத்திற்கு படிப்படியாக மாறி வருகின்றனர். அய்யலூர் பேரூராட்சி 15 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து அன்றாடம் வெளியேறும் குப்பைகள் காய்கறி கடைகளில் இருந்து வெளியேறும் காய்கறி கழிவுகள், பேரூராட்சி துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாத்திகளில் கொட்டி குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது. அதில் மக்கும் குப்பைகளை பாத்திகளில் கொட்டி இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. பின்பு சலிக்கப்பட்ட உரம் தரத்திற்கு ஏற்ப விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் உரம் பூங்காவில் உள்ள பேரூராட்சி விளைநிலங்களில் காய்கறி பயிர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.பேரூராட்சி செயல் அலுவலர் பாண்டீஸ்வரி கூறுகையில், அய்யலூர் வளம் மீட்பு பூங்காவில் ஒரு டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயாராக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உரம் மிகவும் தரமாக உள்ளதால் விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.மேலும் காய்கறி பயிர்களுக்கு அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். உள்ளூர் விவசாயிகள் தங்களது வீட்டுத் தோட்டங்களுக்கு அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் என்றார்.மேலும் இயற்கை உரம் ஒரு டன் ரூ.750க்கும், மண்புழு உரம் ஒரு கிலோ 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது….

Related posts

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்திய விமானப்படையின் ஏர் ஷோ சென்னை குலுங்கியது: 15 லட்சம் பேர் பரவசம்

மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சிக்கு முதல்வர் வாழ்த்து