குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் மூச்சுச்திணறல்

ஓசூர், மே 9: ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. காமராஜ் நகரில் 8வது தெருவில் தெரு விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் குப்பை கழிவுகள் அகற்றப்படாததால் இரவு நேரத்தில் மர்மநபர்கள், குப்பைக்கு தீ வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் குப்பை கழிவுகள் எரிந்து எழும் கரும்புகையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அருகில் வீடுகளில் வசிப்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அவ்வழியாக செல்பவர்களுக்கு மூச்சு திணறல், குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டு சிரமப்படுகின்றனர். எனவே, உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு