குப்பைகளை அகற்ற கோரிக்கை

சின்னமனூர்: சின்னமனூர் அருகே, பொது இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அய்யம்பட்டி கிராம ஊராட்சியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த  கிராமத்தில் உள்ள வீடுகளில் சேரும் குப்பைக்கழிவுகளை குப்பைதொட்டிகளில்  கொட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கிராம மக்கள் சிலர், சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் சுகாதாரகேடு நிலவுவதுடன், கொசுக்களின் உற்பத்தி கூடாரமாக மாறி வருகிறது. எனவே பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல இடங்களில் குப்பைத்தொட்டிகள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்

சாத்தூர் அருகே பயங்கர விபத்து; பட்டாசு ஆலை வெடித்து 4 பேர் பலி: குடும்பத்தினருக்கு தலா ரூ3 லட்சம் முதல்வர் நிதியுதவி