குன்றம் பங்குனி விழாவில்தேரோட்டத்திற்கு தயாராகும் தேர்

திருப்பரங்குன்றம், ஏப்.5: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டத்திற்காக தேரில் அலங்கார வேலைப்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கொடியேற்றம் கடந்த 26ம் தேதி நடைபெற்றது/ இந்த திருவிழா வருகின்ற ஏப்.10ம் தேதி நிறைவடைகிறது. இதில் முக்கிய விழாக்களான திருக்கல்யாணம் வருகின்ற 8ம் தேதியும், தேரோட்டம் வருகின்ற 9ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்த விழாக்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தேரோட்டத்திற்காக தேரில் அலங்கார வேலைப்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதற்காக பணியாளர்கள் தேரில் அலங்கார வேலைப்பாடுகளை செய்து வருகின்றனர். திருவிழா நாட்களில் தினமும் காலை. மாலை இரு வேளைகளிலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு