குன்றத்தூர் மின்வாரிய அலுவலகம் நாளை முதல் புதிய முகவரியில் இயங்கும்

சென்னை:  மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குன்றத்தூர் உப கோட்ட அலுவலகம், உதவி பொறியாளர் / இயக்கம் மற்றும் பராமரிப்பு / குன்றத்தூர் ஊரகம் பிரிவு அலுவலகம் மற்றும் கட்டணம் வசூல் மையம் ஆகிய அலுவலகங்கள் எண்.1, பல்ல தெரு, குன்றத்தூரில் செயல்பட்டு வருகிறது. நாளை (1.6.2022) முதல் 33/11 காவனூர் துணை மின் நிலைய வளாகம், காவனூர் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை (மாதா உயர்நிலை பள்ளி அருகில்) காவனூர், குன்றத்தூர், சென்னை –  69 என்ற முகவரியில் செயல்படும். குன்றத்தூர் பிரிவின் கீழ் காவனூர், சிறுகளத்தூர், சரஸ்வதி நகர், மணிமங்கலம் சாலை, பெரியர் நகர், அன்னை அஞ்சுகம் நகர், தேவி கருமாரியம்மன் நகர், நந்தவனம் நகர், நந்தம்பாக்கம், பொன்னியம்மன் கோவில் தெரு, ஆகிய பகுதிகள் வரும். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்