குன்றத்தூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் முடிவடைந்த மற்றும் ஊரக வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இதனை கலெக்டர் ஆர்த்தி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் எழிச்சூர் ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் கழிவுநீர் வடிகால்வாய், செரப்பணஞ்சேரி ஊராட்சியில் ரூ.6.04 லட்சத்தில் கழிவுநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்ட பணி, வைப்பூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.17.32 லட்சத்தில் நடுநிலைப்பள்ளிக்கு 2 அறைகள் கொண்ட கட்டிட பணி. மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.15.05 லட்சத்தில் கூழங்கலச்சேரி கிராமத்தில் ஆணைகுட்டை பணி, படப்பை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.12.55 லட்சத்தில் ஆஷா நகரில் சமுதாய கிணறு.அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகப் பணி, தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.30.6 லட்சத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரிக்கும் கூடம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.4 லட்சத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள், மணிமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.4.95 லட்சத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் கட்டுதல், மணிமங்கலம் ஊராட்சியில் அரசு ஆரம்ப பள்ளி ஆகியவற்றை கலெக்டர் விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அருண், உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்பட பலர் இருந்தனர்….

Related posts

செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை