குன்றத்து மலை மீது சோலார் மின் விளக்கு

திருப்பரங்குன்றம், ஜூலை 11: முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் மலை மீது காசிவிசுவநாதர் கோயில் உள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இந்த கோயிலில் 2 கிலோ வாட் சோலார் மின் தகடுகள் அமைக்கப்பட்டு சோலார் மின்சாரம் மூலம் இப்பகுதியில் உள்ள மின் விளக்கு மற்றும் இங்குள்ள கண்காணிப்பு கேமரா ஆகியவை இயக்கப்படுகிறது. சோதனை ஓட்டத்தில் இருந்த இந்த சோலார் மின்விளக்கு நேற்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்