குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விரிவான அறிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விசாரணை குழு இன்று தாக்கல்

குன்னூர் : குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விரிவான அறிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விசாரணை குழு இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த நச்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த மாதம் 8ம் தேதி MI 17 ரக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் இதர 11 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 14 பேரை பலி கொண்ட இந்த கோர விபத்து குறித்து தமிழ்நாடு போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க ஏர் மார்ஷல் மனவேந்திரா சிங் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. விபத்து நடந்த பகுதியில் கறுப்புப் பெட்டி மற்றும் ஹெலிகாப்டரில் உதிரி பாகங்களை மீட்டு இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.இந்த நிலையில் விபத்திற்கான காரணம் குறித்த விரிவான அறிக்கையை பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங்கிடம் இந்த குழு அளிக்க உள்ளது. ரயில் வழித் தடத்தின் மேலே பறந்து சென்ற ஹெலிகாப்டர் பனி மூட்டத்தில் சிக்கியுள்ளது. பின்னர் அதில் இருந்து வெளியேற முயற்சித்த போது, கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றியதாக கூறப்படுகிறது. விபத்திற்கு உள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த அனைத்து வீரர்களும் மாஸ்டர் கிரீன் என்ற அந்தஸ்தை பெற்றவர்கள் ஆவர். விபத்தை நேராமல் தப்பித்து விட முடியும் என அவர்களுக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாகவே கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் தகவல் தராமல் இருந்திருக்க கூடும். எனவே இனி வரும் காலங்களில் மாஸ்டர் கிரீன் அந்தஸ்து வீரர்களோடு மற்ற வீரர்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற பரிந்துரையை விசாரணை குழு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. …

Related posts

1968-ல் விமான விபத்து: பலியான 4 பேரின் உடல் மீட்பு

பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!!

எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கு: மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு