குன்னூர் பர்லியாரில் குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழ சீசன் துவக்கம்

குன்னூர் :  குன்னூர் பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில் குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் சீசன் துவங்கி உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் பல்வேறு அரிய வகை, மூலிகை தாவரங்கள், பழங்கள் விளைகிறது. இதில், குன்னூர் பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில், மருத்துவ குணங்கள் நிறைந்த துரியன் பழ மரங்கள் உள்ளன. சுமார் 35 மரங்களில் தற்போது குழந்தை பாக்கியத்தை தரும் துரியன் பழங்கள் காய்க்க துவங்கி உள்ளது. இந்தாண்டு அதிகளவில் காய்த்துள்ளது.இந்த பழத்தை உண்பதன் மூலம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை போக்கும் என்பதால் ஆண்டுதோறும் விற்பனை அதிகரித்து வருகிறது. இங்குள்ள 35 மரங்களில்  ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும், ஜூன், ஜூலை மாதங்களிலும் பழங்கள் காய்க்க தொடங்கும். இந்த பழம் பழுத்து மரத்திலிருந்து தானாக கீழே விழும். அவற்றை சேகரித்து விற்பனைக்கு கொண்டு செல்வர். ஆண்டுதோறும் பழங்களை விற்பனை செய்ய ஏலம் விடப்படுகிறது. வரும் வாரங்களில் துரியன் பழங்களை ஏலம்  விட தோட்டக்கலை துறையினர் முடிவு செய்துள்ளனர்….

Related posts

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்