குன்னூர் டிஎஸ்பி தலைமையில் போக்குவரத்து நெரிசல் சீர்படுத்தும் பணி

 

கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு சமவெளி பகுதிகளில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் குன்னூர் டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கிய நிலையில் மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்திற்கு சமவெளி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குன்னூர் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு தங்களின் சொந்த ஊர்களான சமவெளி பகுதிகளுக்கு திரும்புகின்றனர். இவ்வாறு செல்வோர், கோத்தகிரி குஞ்சப்பனை சோதனை சாவடி வழியாக செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்துள்ளனர்.

மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வண்ணம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் அறிவுறுத்தலின் படி குன்னூர் டிஎஸ்பி கோவிந்தசாமி தலைமையில் கோத்தகிரி அருகே உள்ள முக்கிய சாலை வழி சந்திப்பான கட்டபெட்டு பகுதியில் கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பதி மற்றும் சமவெளி பகுதியில் இருந்து வந்துள்ள காவல்துறையினர் மூலம் வரும் வாகனங்களின் உரிய விளக்கம் கேட்டு முறையான சாலையில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படா வண்ணம் பணிகள் மேற் கொள்ளப்பட்டது. மேலும் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட வளைவுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் ஒலி எழுப்பி, குறிப்பிட்ட கியரில் வாகனங்களை இயக்கவும் சுற்றுலா மற்றும் சமவெளி பகுதி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்