குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நுழைந்த கரடி சர்க்கரை டப்பாவுடன் ஓட்டம்

குன்னூர்: நீலகிரி மாவட்டம்  குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் இருந்து கரடிகள் வெளியேறி தேன் மற்றும் எண்ணெய் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்குள் நேற்று நள்ளிரவில் கரடி ஒன்று புகுந்தது. பூங்காவிற்குள் உலா வந்த கரடி அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தங்கும் விடுதியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. சமையல் அறையில் இருந்த சர்க்கரையை ருசித்து தின்றது. பின்னர் மீதி இருந்த  சர்க்கரையை டப்பாவோடு தூக்கி சென்றது. இது குறித்து பூங்கா ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல்  தெரிவித்தனர். வனத்துறையினரின் கரடி நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்….

Related posts

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்