குன்னூரில் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு

 

ஊட்டி, ஜூன் 10: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரிஸ் ஆகியவை சார்பில் மாவட்ட அளவிலான கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மற்றும் உபதலை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒரு மாத காலம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

கேலோ இந்தியா பயிற்சியாளர் சிஜூமோன் மற்றும் தேசிய ஹாக்கி நடுவர் பிரசாந்த் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து பயிற்சி நிறைவு விழாவிற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா கலந்து கொண்டு வீரர்களுக்கு சீருடை, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.  சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரி அமைப்பு தலைவர் ஆனந்த கிருஷ்ணன், துணைத்தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராஜா, குன்னூர் போக்குவரத்து ஆய்வாளர் முத்து கணேசன் மற்றும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் காணொலி பகுப்பு ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்