குன்னூரில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

 

குன்னூர், ஜூலை 31: நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் குன்னூரில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைகட்டியது. நாள் முழுவதும் பரபரப்பாக இயந்திர கதியில் இயங்கி கொண்டிருக்கும் பொதுமக்கள்,பரபரப்பிற்கும், மன அழுத்ததிற்கும் லீவ் விட்டு மகிழ்வாக வார விடுமுறையை கொண்டாடும் நோக்கில் சென்னையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுகிழமைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் வாகன போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டு ேஹப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்ட காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் நேற்று காலை 10 மணி முதல் 1 மணி வரை குன்னூர் மவுண்ட் ரோட்டில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு ஹேப்பி ஸ்டீரீட் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட எஸ்பி., பிரபாகர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சதுரங்கம்,கேரம்போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.மேலும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தது.பாடல்களுக்கு உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஆடி பாடி மகிழ்ந்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related posts

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து மனைவி தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் காயம் பேரணாம்பட்டு அருகே

மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழாவில் 3 ஆயிரம் பேர் திரண்டனர் 100 ஆடுகளை பலியிட்டு வீடுதோறும் கறி விருந்து தொங்குமலை காளியம்மன் கோயிலில் கோலாகலம்

ஆடுகளின் விலை உயர்ந்து ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் ஒரு ஜோடி ₹40 ஆயிரத்துக்கு விற்பனை ஒடுகத்தூர் வாரச்சந்தையில்