குந்தாரப்பள்ளி அருகே 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே கேட்பாரற்று கிடந்த 1.2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்ஐக்கள் தென்னரசு, கோபிநாத் மற்றும் ஈஸ்வரன் நேற்று முன்தினம் மாலை, கிருஷ்ணகிரி-வேப்பனஹள்ளி சாலையில் உள்ள குந்தாரப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு 24 மூட்டைகளில் 50 கிலோ அளவிலான 1,200 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. இதையடுத்து அந்த அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். …

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்