குத்து சண்டை வீராங்கனைக்கு நிதி உதவி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காசோலை வழங்கினார்

 

திருப்பூர், ஜூலை 20: திருப்பூரை சேர்ந்த குத்து சண்டை வீராங்கனை அனிதா கோவாவில் நடைபெறும் தேசிய அளவிலான குத்து சண்டை போட்டியில் கலந்து கொள்ள மற்றும் போட்டிக்கான உபகரணங்கள் வாங்க நிதி உதவி கேட்டார். இதனைத்தொடர்ந்து, திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் ஏற்பாட்டில் செல்வராஜ் எம்.எல்.ஏ முன்னிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்து சண்டை வீராங்கனைக்கு ரூ.30 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திரகுமார் மற்றும் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி