குத்தாலம் அருகே மருத்தூரில் மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

 

குத்தாலம், ஜூன் 2: மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் அருகே மருத்தூர் கிராமத்தில் உள்ள கீழத்தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் இரண்டாம் ஆண்டு விசாகப் பெருவிழா கடந்த 22-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து சுவாமி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் ஏராளமான பக்தர்கள் வீரசோழன் ஆற்றின் கரையில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர்.

பின்பு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் 15 அடி நீளம் கொண்ட அலகினை வாயில் குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி பார்ப்போரை பக்தி பரவசமடைய செய்தது. அதனை அடுத்து சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை