குத்தாலம் அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

குத்தாலம் : குத்தாலம் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா அனந்தநல்லூர் அருகே கும்பகோணம் முதல் தரங்கம்பாடி வரை செல்லும் நெடுஞ்சாலையில் தார்சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து மிகுந்த அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் சாலையில் தாழ்வான பல பள்ளம் மேடுகளும் காணப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இந்த சாலை பயணம் மிகுந்த அளவில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. சாலையில் அரிமானம் ஏற்பட்டு உள்ளதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கோமல், கந்தமங்கலம், அனந்தநல்லூர், மங்கைநல்லூர் போன்ற ஊர் கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகளுக்கு செல்லவும் விவசாயிகள் தங்களுக்கான பணிகளை மேற்கொள்ளவும். மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இந்த சாலை பிரதான சாலை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதிதாக அமைத்து தர இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு