குதிரையேற்ற பயிற்சி பெறும் காஜல் அகர்வால்

சென்னை: மகதீரா தெலுங்கு படத்தில் ராணி வேடத்தில் காஜல் அகர்வால் நடித்தார். அப்போது குதிரையேற்ற பயிற்சி பெற்றிருந்தார். இந்நிலையில் பல வருடம் கழித்து இப்போது இந்தியன் 2 படத்துக்காக குதிரையேற்ற பயிற்சி பெற வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி குதிரையேற்ற பயிற்சியை சென்னையில் காஜல் தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதுபற்றி காஜல் அகர்வால் கூறும்போது, ‘குழந்தை பிறந்த பிறகு பழைய நிலைக்கு மீண்டும் திரும்புவது கடினமாக உள்ளது. குறிப்பாக தற்காப்புக்கலை பயிற்சியின் போது எனது உடல் ஒத்துழைக்கவில்லை. பெண்கள் தங்கள் உடலை நினைத்து கவலை கொள்ளாமல் மீண்டெழ வேண்டும். நமது உடல்கள் மாறலாம் அல்லது மாறாமல் இருக்கலாம், ஆனால் நமது ஆர்வம் மாறக்கூடாது. அதற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும். குதிரையேற்றமும் அதுபோல் எனக்கு முதல் நாளில் சிரமத்தை கொடுத்தது. ஆனால் இப்போது எனது ஆர்வம் காரணமாக, அது பழகிவிட்டது. சினிமாவில் மேலும் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் அதிகரித்துள்ளது’ என்றார்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு