குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நெடுஞ்சாலைத்துறை அலுவலக சாலை: சீரமைக்க மக்கள் கோரிக்கை

ஊட்டி: ஊட்டி சாமுண்டி சந்திப்பு முதல் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. ஊட்டி எட்டின்ஸ் சாலையில் ஏடிசி அருகே சாமுண்டி சந்திப்பில் இருந்து நெடுங்சாலைத்துறை அலுவலகம், ரோஜா பூங்கா மற்றும் எல்க்ஹில் முருகன் கோயில் மற்றும் சவுத்வீக் பகுதிக்கு செல்ல சாலை உள்ளது. இந்த சாலை ஊட்டி நகராட்சியின் கட்டுபாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, இச்சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரோஜா பூங்காவிற்கு செல்ல கூடிய சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊட்டி நகரில் பல முக்கிய சாலைகள் தார் ஊற்றி செப்பனிடப்பட்டு வரும் நிலையில் இந்த சாலையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பாம்பேகேசில் பகுதியை சேர்ந்த ரமேஷ் கூறுகையில்,`சாமுண்டி சந்திப்பில் இருந்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் வரை சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.இதனால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வர கூடிய இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்க கூடிய நிலையும் உள்ளது. எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும், என்றார்….

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரிப்பு; ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை