குண்டுமல்லி கிலோ ₹800ஆக அதிகரிப்பு

சேலம், மார்ச் 9: சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டுமல்லி, முல்லை, கனகாம்பரம், அரளி, ரோஸ், சம்பங்கி, சாமந்தி உள்பட பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட், சென்னை, கோவை, பெங்களூருக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த வாரம் பூக்களின் தேவை இல்லாமல் இருந்ததால் விலை சரிந்து இருந்தது. நேற்று மகாசிவராத்திரி, இன்று அமாவாசையையொட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து பூக்களின் விலையும் சற்று கூடியுள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ குண்டுமல்லி ₹800 என உயர்ந்தது. ஜாதிமல்லி ₹600, காக்கட்டான் ₹500, கலர் காக்கட்டான் ₹500, மலை காக்கட்டான் ₹450, சம்பங்கி ₹160, சாதா சம்பங்கி ₹240, அரளி ₹200 என விற்பனை செய்யப்பட்டது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை