குண்டாசில் ரவுடி கைது

பெரம்பூர்: வியாசர்பாடி பி.வி. காலனி 9வது தெருவை சேர்ந்தவர் கிஷோர் (24). இவர் மீது எம்கேபி நகர், கொடுங்கையூர், வியாசர்பாடி மற்றும் செம்பியம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும் உள்ளன. கோவையில் மட்டும் 18 திருட்டு வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஜூலை 14ம் தேதி எம்கேபி நகர் போலீசார், கிஷோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் கிஷோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இன்ஸ்பெக்டர் அம்பேத்கார், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார். அவர் கிஷோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள கிஷோரை மீண்டும் கைது செய்தனர்….

Related posts

அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு

காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!