குண்டர் தடுப்பு சட்டத்தில் 7 பேர் கைது

தென்காசி, ஜூன் 1: புளியங்குடியில் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகளில் கைதான வாசுதேவநல்லூர் புதுமந்தை தெரு இளங்கோவன்(28), மலையடிகுறிச்சி ஜெயச்சந்திரன்(33), சங்கரன்கோவில் காவேரி நகர் செந்தில் குமார்(42) ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களை குண்டாசில் கைது செய்ய தென்காசி எஸ்பி சுரேஷ்குமார் பரிந்துரைந்தார். கலெக்டர் கமல்கிஷோர் அவர்களை குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டத்தின் பேரில் 3 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். சேரன்மகாதேவியை சேர்ந்த சுப்பையா, செண்பகம், மாதேஷ், மேலச்செவல் சிவா ஆகியோர் வழக்குகளில் கைதாகி பாளை சிறையில் உள்ளனர். இவர்களை குண்டாசில் கைது செய்ய சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, நெல்லை எஸ்பி சிலம்பரசன் ஆகியோர் கலெக்டர் கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தனர். அவரது உத்தரவின் பேரில் 4 பேரையும் குண்டாசில் கைது செய்ததற்கான உத்தரவு நகல், பாளை. சிறையில் வழங்கப்பட்டது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு