குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

புளியங்குடி, ஜூன் 2: தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் புதுமந்தை தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் இளங்கோவன் (28). இவர் மீது புளியங்குடி, வாசுதேவநல்லூர் காவல்நிலையத்தில் அடிதடி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது சிறையில் உள்ளார். இதேபோன்று மலையடிக்குறிச்சி முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மகன் ஜெயச்சந்திரன் என்ற விஞ்ஞானி (33). இவர் மீது வழிப்பறி, அடிதடி வழக்குகள் உள்ள நிலையில் தூத்துக்குடி சிறையில் உள்ளார். இளங்கோவன், ஜெயச்சந்திரன் என்ற விஞ்ஞானி ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட எஸ்பி சுரேஷ்குமாருக்கு புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் கண்மணி ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதையடுத்து தென்காசி கலெக்டர் கமல்கிஷோர் உத்தரவின்பேரில் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு