குட்கா விற்ற கடைக்கு சீல்

தர்மபுரி, செப்.14: தர்மபுரி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுகிறதா என, உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரண்குமார், திருப்பதி மற்றும் டவுன் போலீசார் சுரேஷ், குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பெரியார்சிலை, சோலைக்கொட்டாய், கிருஷ்ணகிரி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட பெட்டிக்கடை, மளிகை கடைகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், ஆத்துமேடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட ₹1000 மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அந்த கடைக்கு சீல் வைத்து, உரிமையாளருக்கு ₹25 ஆயிரம்
அபராதம் விதித்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்