குட்கா விற்ற கடைக்கு சீல்

தர்மபுரி, ஜூன் 22: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட மெணசி, பூதநத்தம், விருதுபட்டி, கதிரிபுரம் போன்ற கிராமங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, ஒரு கடையை பூட்டி சீல் வைத்து உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளின் அருகேயுள்ள 4 கடைகளில் ஆய்வு செய்து, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் அந்த 4 கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு தலா ₹2,000 வீதம் மொத்தம் ₹8,000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தெரிவித்தார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு